Thursday, January 15, 2015

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


இந்த தை திருநாளில் உங்கள் இல்லங்களில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்


Tuesday, January 13, 2015

பொங்கல் திருநாள் அன்று வைக்கப்படும் கூட்டு குழம்பு



பொங்கல் அன்று  சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொண்டு செய்யப்படும் இந்த குழம்பை, கொஞ்சம் கெட்டியாக வைக்கவேண்டும்.
படத்தில் சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் , கூட்டு குழம்பு


தேவை:
 பரங்கி காய் (பரங்கி பிஞ்சு இருந்தால் சுவையாக இருக்கும் , இல்லை என்றால் பழம் ), 1 கிற்று
மொச்சை(உறித்தது)- 2 கைபிடி
கத்திரி காய் - 2
அவரை - 15
சர்க்கரை வள்ளி கிழங்கு-1
 வாழை காய் - 1
உருளை- 1

சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
தக்காளி - 2
கொத்தமல்லி இலை  - 1  கைபிடி
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 Tbsp  அல்லது  காரத்துக்கு ஏற்ப
மல்லி தூள்- 1 அல்லது 11/2 Tbsp
மஞ்சள்  தூள்- 1 tsp
கல் உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்ல எண்ணெய் -  2 or 3 Tbsp

தாளிக்க :
கடுகு - 1/2 tsp
உளுந்து - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கைபிடி

 செய்முறை  :
  •  பரங்கி காய்,  சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழை காய்களை பட்டை சீவி சிறிய துண்டுகளாக வெட்டவும். மற்ற காய்களையும்  இதே போல் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • வெங்காயத்தை தோல் உறித்து இரண்டாக வெட்டவும்.
  • தக்காளியை நீட்ட வாகில் வெட்டவும்.
  •   புளியை கரைத்து வைக்கவும் .
  •  சட்டியில் எண்ணையை காயவைத்து , தாளிக்க கொடுத்த பொருள்களை சேர்க்கவும் .எல்லாம் பொரிந்து, லேசாக சிவந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக சிவக்க வேண்டும் .பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கிய பின் காய்களை சேர்த்து வதக்கவும் . காய்கள் நன்றாக வதங்க வேண்டும். எண்ணெய் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்றி கொள்ளவும். இப்போது புளி தண்ணீர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள்  தூள், கல் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . காய்கறிகள் வெந்து குழம்பு நன்றாக சுண்டிய பின் கொத்தமில்லி இலை போட்டு இறக்கவும்.


    குறிப்பு :
    • காய்கள் நன்றாக வதங்கினால் தான் குழம்பு சுவையாக இருக்கும் .
    • குழம்பு என்று சொன்னாலும், இது சாந்து போல் தான் இருக்க வேண்டும் , அதனால் தண்ணீர் சேர்க்கும் போது அளவாக சேர்க்கவும்.





Wednesday, December 10, 2014

மகள்

என்னோடு உறங்கி 
என்னோடு எழுந்து 
பின்னோடு தொடரும் நிழல்...

Friday, November 21, 2014

திணை இட்லி

சற்று நீண்ட  இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி.

இந்த பதிவு திணை  இட்லி செய்வது பற்றி…


 படத்தில் திணை இட்லி+ சௌசௌ சட்னி

தேவையான பொருள்கள்;
திணை-  கால் படி(400 gm approx)
உளுந்து- 1 வீசம்படி (100 gm approx)
வெந்தயம்- 1 மேசைக்கரண்டீ
செய்முறை;

  •    திணை, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் கழுவி தனிதனியாக 2 அல்லது 3 மணி நேரம் தேவையான தண்ணீர் சேர்த்து ஊர வைக்கவும்.
  •   முதலில் வெந்தயத்தை அது ஊறிய  தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். வெந்தயம் அரைந்ததும், உளுந்து சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மைய அரைத்து எடுக்கவும்.
  •       பிறகு திணையை தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து சற்று கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்
  •   அரைத்த உளுந்து மாவு, தினை மாவுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைத்து இட்லி சுடவும். காலையில் அரைத்து மாலையில் சுடலாம், அல்லது மாலையில் அரைத்து மறு நாள் காலை சுடலாம்

குறிப்பு;
  • இதில் கவனிக்க வேண்டியது மாவின் பதம். சற்று கெட்டியாக இருந்தால் தான் இட்லி நன்றாக வரும், இல்லை என்றால் இட்லி அரைந்து விடும்.
  • சூடாக சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும், ஆறினால் கல் போல ஆகிவிடும் .
  • இதே போல், திணைக்கு பதில் சாமை அரிசி, வரகு அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு கொண்டும் இட்லி சுடலாம்.

Sunday, March 30, 2014

நெல்லிக்காய் சாதம்



தேவை :
பெரிய நெல்லிக்காய்- 2
சாதம்  - 1 கப் ( approx. 200gm கொண்டு வடித்த சோறு)
வர  மிளகாய் -2
தளிக்க : நல்ல எண்ணெய் 3 Tbsp , கடுகு 1tsp , உளுந்த பருப்பு 1tsp  , பெருங்காயம் 1/4 tsp       கறிவேப்பிலை - 1 ஈர்க்கு  , கொத்தமல்லி தழை  சிறிது  

செய்முறை:

  1.  சாதத்தில் 2Tbsp எண்ணெய் ஊற்றி ஆறவைக்கவும்.
  2. நெல்லிக்காய் விதை நீக்கி, மிளகாய் , கல் உப்பு  சேர்த்து அரைக்கவும்.
  3. அடுப்பில் 1 Tbsp நல்ல எண்ணெய் சுட வைத்து , கடுகு, உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்த உடன்  பெருங்காயம் ,  கறிவேப்பிலை, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.  
  4. இதை சற்று ஆறவைத்த சோற்றில் சேர்த்து கிளறவும்.
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

Thursday, January 23, 2014

வரகு அரிசி தக்காளி சோறு


தேவை :
வரகு அரிசி சோறு - 1 கப்
தக்காளி -4 (medium size)
சின்ன வெங்காயம் - 2 கை 
பச்சை மிளகாய் -2 /3
பூண்டு - 4 பல் 
இஞ்சி - 1" துண்டு 
மஞ்சள் தூள் - 1/2 டி ஸ்பூன்
கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு - 1டி ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 3 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை , கொத்தமல்லி , உப்பு ருசிகேற்ப 



செய்முறை :
  1. இஞ்சி  , பூண்டை தோல் உறித்து தட்டி வைக்கவும் .
  2. வெங்காயம் ,   தக்காளியை நீளமாக, மெலிதாக வெட்டி வைக்கவும்.
  3.  பச்சை மிளகாய்யை  நீளமாக வெட்டி வைக்கவும்.
  4.  எண்ணெய்யை  சுட வைத்து கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தட்டி வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் . லேசாக வதங்கிய பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பிறகு  தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள்  தூள், உப்பு  சேர்க்கவும் . காரம் அதிகம் தேவை பட்டால் சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம் . அனைத்தும்  ஒன்று சேர்த்து பச்சை வாசம் போன பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, வரகு அரிசி சோறு சேர்த்து கிளறவும். தேவை பட்டால் நல்ல எண்ணெய் சிறிது ஊற்றி கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுப்பது  என்றால்  நெய்  சேர்த்துகொள்ளலாம். கொத்தமல்லி மெலிதாக வெட்டி தூவினால் , சுவையான வரகு அரிசி தக்காளி சோறு தயார்.

வரகு அரசி சோறு
குறிப்பு :
  1. இந்த  அளவு  அரைகால் படி(approx. 200gm) அரிசிக்கு சரியாக இருக்கும்.
  2. சாமை அரிசி சமைப்பது போலவே வரகு அரிசியும் சமைக்க வேண்டும்.
  3. இஞ்சி  , பூண்டை மிக்ஸ்யில் அரைக்காமல், தட்டி போட்டால் வாசமாக இருக்கும் .
  4. இஞ்சி  , பூண்டு  சேர்க்காமல் கூட செய்யலாம் 



Thursday, January 9, 2014

கேழ்வரகு கொழுக்கட்டை








தேவை :
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் -1/2 மூடி துருவியது
ஏலக்காய் -2
நெய் - 1 தே . கரண்டி

செய்முறை :
  1. வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கெட்டி பாகு வைத்து கொள்ளவும் .
  2.  கேழ்வரகு மாவுடன் சூடான  வெல்லபாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, நெய்  சேர்த்து பிசையவும். மிகவும் சூடாக இருந்தால் முள் கரண்டி கொண்டு கிளறவும். 
  3. மாவு உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். பாகு போதவில்லை என்றால் சிறிது வென்னீர் சேர்த்து கொள்ளவும்.
  4.  கொழுக்கட்டை போல் பிடித்து அல்லது உருண்டையாக உருட்டி இட்லி தட்டில்  20 நிமிடம் வேகவைத்தால் கொழுக்கட்டை தயார்.
  5. இந்த மாவை சற்று மொத்தமாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து பிஸ்கட் cutter கொண்டு வெட்டி வேகவைத்து கொடுத்தல்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Snacks Boxல் கொடுத்து அனுப்ப சுவையான தீனி.


Related Posts Plugin for WordPress, Blogger...