கடந்த சில நாட்களாக மாடி தோட்டத்தில் எந்த கவனமும் இல்லை. புதிதாக எந்த செடிகளும் நடவில்லை. இருப்பினும் சென்ற முறை மிளகாய் காயவைத்த போது எஞ்சிய விதைகளை ஒரு தொட்டியில் தூவினேன் . நிறைய செடிகள் முளைத்தது, பிரித்து பல தொட்டிகளில் வைத்தேன், அணைத்தும் காய்க்க தொடங்கிவிட்டது. ஒரு தக்காளி செடியும், கடுகு செடியும் தானே வளர்ந்து காய்த்தும் விட்டது.
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts
Saturday, March 3, 2018
மாடியில்...
கடந்த சில நாட்களாக மாடி தோட்டத்தில் எந்த கவனமும் இல்லை. புதிதாக எந்த செடிகளும் நடவில்லை. இருப்பினும் சென்ற முறை மிளகாய் காயவைத்த போது எஞ்சிய விதைகளை ஒரு தொட்டியில் தூவினேன் . நிறைய செடிகள் முளைத்தது, பிரித்து பல தொட்டிகளில் வைத்தேன், அணைத்தும் காய்க்க தொடங்கிவிட்டது. ஒரு தக்காளி செடியும், கடுகு செடியும் தானே வளர்ந்து காய்த்தும் விட்டது.
Thursday, July 14, 2016
தப்பு கொடி (கிரிணி பழம் )...
தப்பு கொடி (கிரிணி பழம் )...
நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி , செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.

Wednesday, April 20, 2016
பூக்கள்....
செடிகளில் பூக்கும் பூக்களை விட பூ பூக்கும் மரங்கள் என்னை சிறுவயதில் இருந்து மிகவும் கவர்கிறது. மரமல்லி, சரகொன்றை, மகிழம்பூ, செண்பகபூ, நாகலிகம் போன்ற மரங்கள் . அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் இந்த மரங்களை பார்க்கும் போது சிறு வயதில் நான் பார்த்த மரங்களும், அதை கடக்கும் போது வந்த மணமும் நினைவில் வரும். இப்போது ஊரெங்கும் கொன்றை பூக்கள் அழகாக பூத்துள்ளது. பள்ளிக்கு நகர பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த சரகொன்றை மரத்தில் அதன் அழகிய மஞ்சள் பூக்களை பார்த்தவாறு பயணித்தது இப்போதும் மறக்கவில்லை( சில வருடங்களில் அந்த மரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் வெட்டப்பட்டது).
ஆனால் இந்த புங்க மரம் பற்றி தெரிந்த போதும், சிகைக்காயில் சேர்க்க அதன் விதைகளை தேடி அலைந்த போதும், அதன் பூக்களை கவனித்தது இல்லை . சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், சிக்னலில் காத்துகொண்டு இருந்தபோது தான் இதன் பூக்களை முதன்முதலில் பார்த்தேன். அப்போதும் பூக்களை முதலில் கவனிக்கவில்லை, அதனை சுற்றி பறந்த தேனிகளை தான் பார்த்தேன். இவ்வளவு தேனிகள் ஏன் இங்கு என்று கவனித்தபோது தான் பூக்கள் தெரிந்தன. அடர்த்தியான நிறங்கள் இல்லை ஆனால் அழகான நிறம், கொத்துத் கொத்தாய் அவ்வளவுப் பூக்கள். அப்போது இருந்து புங்க மரத்தை பார்க்கும்போதேல்லாம் பூக்கள் இருகிறதா என்று கவனிப்பேன். இந்த மாதங்கள் கொன்றை பூக்கள் போலவே புங்கம்பூக்கள் பூக்கும் பருவம் போல், எங்கள் வீட்டு வாசலில் உள்ள மரத்தில்லும் பூ பூத்து உள்ளது. பார்த்து ரசித்து படமெடுத்து, மகளுக்கும் காட்டினேன். தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள், ஒரு சிறிய கொத்து பறித்து அவளுக்கு சூடி அழகும் பார்த்தேன் .

Tuesday, September 29, 2015
இயற்கையில் எந்தனை வண்ணம்
இத்தனை வண்ணத்தில் வெட்டுக்கிளி பார்ப்பது இதுதான் முதல்முறை. பச்சை நிறத்திலும், மர நிறத்திலும் சிலமுறை மஞ்சள் நிறத்தில் சிறிய வெட்டுக்கிளிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று மகளை
பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பார்த்துகொண்டு வந்தோம், அப்போது இந்த வெட்டுக்கிளிகள் எருக்கம் பூ செடியில் இருந்தன.
Tuesday, June 30, 2015
ஆவாரம் பூவும் கூட்டு பூழுவும்...
ஆவாரம் பூவின் இந்த பொண் மஞ்சள் நிறம் என்னை மிகவும் கவர்ந்த நிறம் , இதே நிறம் கொண்ட சரகொன்றை பூக்களையும் மிகவும் பிடிக்கும்.
தை மாதத்தில் இந்த பூக்கள் பூக்க தொடங்கும் என்று நினைகிறேன். தை பொங்கல் அன்று ஆவாரம் பூ , கூழை பூ, வேப்பிலை மூற்றையும் வாசல் படியில் கட்டுவோம்.
எங்கள் ஊரில் ஐயன் வாய்கால் கரையில் இந்த பூக்கள் நிறைய இருந்தாலும் பறிக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை.குளியல் பொடிக்கு தேவையான பூக்களை நாட்டு மருந்து கடையில் வாங்கிகொள்வோம்.
இந்த முறை ஊரில் இருந்து வரும் போது வழியில் இந்த பூக்களை பார்த்தேன். ''ஆவாரை பூத்திருக்க சாவாரை பார்த்து உண்டா'' என்று எங்கள் அம்மச்சி சொல்வார்கள். சரி சில பூக்கள் பறித்து கொள்வோம். தேநீர் போட்டு குடித்து பார்க்கலாம்( தொலைக் காட்சியில் ஒருத்தர் சாம்பார் கூட வைத்தார்) என்று பறிக்க தொடங்கினேன். அப்போது அம்மா " நாங்கள்யெல்லாம் ஆற்றில் குளிக்கும் போது ஆவாரம் இலைகளை கல்லில் அரைத்து தலைக்கு குளிப்போம் " என்று சொன்னது ஞாபகம் வந்தது. பூக்களாக பறிக்கவும் நேரம் எடுத்து,எனவே கொஞ்சம் இலைகளோடு பறித்து கொண்டேன்.
வீட்டிற்கு வந்து பூக்களை பறித்த போது, இந்த கூட்டு புழு இருந்தது. இதை போன்ற கூட்டு புழுக்களை அம்மா வீட்டில் பார்திருக்கிறேன். வெளி திண்ணை சுவற்றில் இருக்கும். அங்கு மிதியடியில் இருக்கும் தென்னை நரைக்கொண்டு கூடூ அமைத்து இருக்கும்.இதை பார்த்த போது இந்த பூச்சி அதன் சுற்றுபுறத்தில் இருக்கும் பொருள்களை கொண்டு கூடு அமைக்கிறது என்று புரிந்தது. இது இவை உயிர் பிழைக்க கடைபிடிக்கும் உத்தி என்று நினைக்கிறேன். இயற்கையின் சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டு புழுக்களை மட்டும் தான் பார்திருக்கிறேன் , இது என்ன பூச்சியாக மாறும் என்று எனக்கு தெரியாது. இந்த புழுவை இங்கு விட்டால் பிழைக்குமா என்றும் தெரியவில்லை.
ஆவாரம் பூதேநீர் அடுத்த பதிவில்...
Subscribe to:
Posts (Atom)