Tuesday, September 3, 2013

கேழ்வரகு அடை



தேவை :
கேழ்வரகு -1 ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 2 கைபிடி  மெலிதாக வெட்டியது 
தேங்காய்- 1/2 மூடி (துருவல் அல்லது பல் பல்லாக வெட்டியது )
பச்சை மிளகாய் -  2 அல்லது 3 மெலிதாக வெட்டியது
முருங்கை கீரை - 2 அல்லது 3 கைபிடி
 எண்ணெய்
  • கேழ்வரகை 3 மணி நேரம் உறவைத்து அரைக்கவும்.
  •  அரைத்த மாவுடன் வெங்காயம், மிளகாய் , தேங்காய் , முருங்கை கீரை, உப்பு சேர்த்து நன்றாக் கலக்கவும் .
  • தோசை கல்லை காய வைத்து மெல்லிய அடைகளாய் தட்டவும்  . கொஞ்சமாக எண்ணெய் விட்டு , இரண்டுபுறமும் திருப்பி போட்டு வேகவைக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .  
குறிப்புகள் :
 கேழ்வரகு மாவு என்றால் மாவில் சிறிது வென்னீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் .
 முருங்கைகீரைக்கு பதில் காரட் , முட்டைகோஸ் ,பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து செய்யலாம் 


Saturday, June 29, 2013

கம்பு தோசை




தேவையான பொருள்கள் :
கம்பு - 1 ஆழாக்கு
உளுந்து -1/4 ஆழாக்கு
தனியா, சீரகம் - சிறிதளவு
வர மிளகாய் - 4 அல்லது 5
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் 1 கைபிடி


செய்முறை :
  1. 4 பங்கு கம்புக்கு 1 பங்கு உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின்  கம்பு , உளுந்து,  தனியா, சீரகம், வர மிளகாய், வெங்காயம், உப்பு   சேர்த்து  சற்று கொரகொரபாக அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம், அரைத்தவுடன் தோசை ஊற்றலாம். 
  3.  நல்ல எண்ணெய்  அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
மாவு கொரகொரபாக இருந்தால் தான் கம்பு தோசை ருசியாக   இருக்கும். இத்துடன் முருங்கை கீரை அல்லது  காரட் , முட்டைகோஸ்,  பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து அடை போலவும் செய்யலாம் .

Wednesday, May 29, 2013

இனிப்புடன் இனிய தொடக்கம்-திணை பொங்கல்




தேவையான பொருள்கள் :
திணை - 1 ஆழாக்கு 
பாசிபருப்பு - 1/2 ஆழாக்கு
வெல்லம் - 1 1/2 அல்லது 2 ஆழாக்கு
சுக்கு
ஏலக்காய்
நெய்


செய்முறை :
  1. பாசி பருப்பை வறுத்து கொள்ளவும். 
  2. திணையை கல் நீக்கி சுத்தம் செய்யவும்.
  3.  3  ஆழாக்கு தண்ணீரில் பாசி பருப்பை  வேக வைக்கவும்.
  4.  பாசி பருப்பு மலர்ந்து வெந்தவுடன் தினையை சேர்த்து  குழைய  வேக வைக்கவும்.  
  5. வெல்லதை பாகு காய்ச்சி சேர்க்கவும்.
  6.  திராட்சை முந்திரியை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய், சுக்கு பொடி செய்து சேர்க்கவும் . சுவையான , சத்தான  திணை பொங்கல் தயார் .

குறிப்பு :
பாசி பருப்பின் அளவை உங்கள் சுவைக்கு தக்க கொஞ்சம் குறைத்து கூட போடலாம். சிறிது உப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...