Thursday, January 23, 2014

வரகு அரிசி தக்காளி சோறு


தேவை :
வரகு அரிசி சோறு - 1 கப்
தக்காளி -4 (medium size)
சின்ன வெங்காயம் - 2 கை 
பச்சை மிளகாய் -2 /3
பூண்டு - 4 பல் 
இஞ்சி - 1" துண்டு 
மஞ்சள் தூள் - 1/2 டி ஸ்பூன்
கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு - 1டி ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 3 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை , கொத்தமல்லி , உப்பு ருசிகேற்ப 



செய்முறை :
  1. இஞ்சி  , பூண்டை தோல் உறித்து தட்டி வைக்கவும் .
  2. வெங்காயம் ,   தக்காளியை நீளமாக, மெலிதாக வெட்டி வைக்கவும்.
  3.  பச்சை மிளகாய்யை  நீளமாக வெட்டி வைக்கவும்.
  4.  எண்ணெய்யை  சுட வைத்து கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தட்டி வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் . லேசாக வதங்கிய பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பிறகு  தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள்  தூள், உப்பு  சேர்க்கவும் . காரம் அதிகம் தேவை பட்டால் சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம் . அனைத்தும்  ஒன்று சேர்த்து பச்சை வாசம் போன பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, வரகு அரிசி சோறு சேர்த்து கிளறவும். தேவை பட்டால் நல்ல எண்ணெய் சிறிது ஊற்றி கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுப்பது  என்றால்  நெய்  சேர்த்துகொள்ளலாம். கொத்தமல்லி மெலிதாக வெட்டி தூவினால் , சுவையான வரகு அரிசி தக்காளி சோறு தயார்.

வரகு அரசி சோறு
குறிப்பு :
  1. இந்த  அளவு  அரைகால் படி(approx. 200gm) அரிசிக்கு சரியாக இருக்கும்.
  2. சாமை அரிசி சமைப்பது போலவே வரகு அரிசியும் சமைக்க வேண்டும்.
  3. இஞ்சி  , பூண்டை மிக்ஸ்யில் அரைக்காமல், தட்டி போட்டால் வாசமாக இருக்கும் .
  4. இஞ்சி  , பூண்டு  சேர்க்காமல் கூட செய்யலாம் 



Thursday, January 9, 2014

கேழ்வரகு கொழுக்கட்டை








தேவை :
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் -1/2 மூடி துருவியது
ஏலக்காய் -2
நெய் - 1 தே . கரண்டி

செய்முறை :
  1. வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கெட்டி பாகு வைத்து கொள்ளவும் .
  2.  கேழ்வரகு மாவுடன் சூடான  வெல்லபாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, நெய்  சேர்த்து பிசையவும். மிகவும் சூடாக இருந்தால் முள் கரண்டி கொண்டு கிளறவும். 
  3. மாவு உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். பாகு போதவில்லை என்றால் சிறிது வென்னீர் சேர்த்து கொள்ளவும்.
  4.  கொழுக்கட்டை போல் பிடித்து அல்லது உருண்டையாக உருட்டி இட்லி தட்டில்  20 நிமிடம் வேகவைத்தால் கொழுக்கட்டை தயார்.
  5. இந்த மாவை சற்று மொத்தமாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து பிஸ்கட் cutter கொண்டு வெட்டி வேகவைத்து கொடுத்தல்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Snacks Boxல் கொடுத்து அனுப்ப சுவையான தீனி.


Monday, December 2, 2013

சாமை அரிசி தேங்காய் சோறு


தேவை :
  • சாமை அரிசி   - 1 ஆழாக்கு 
  • தேங்காய் துருவல் - 1/2 மூடி 
  • பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன  வெங்காயம் - 1 கைபிடி
  • பச்சை மிளகாய்  / வர மிளகாய்- 2/3( நீளமாக  வெட்டவும்)
  • கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு,  உளுந்த பருப்பு - 1 டி ஸ்பூன் 

  • நல்ல எண்ணெய் அல்லது
         தேங்காய் எண்ணெய்        - 2/3  டி ஸ்பூன்
  • கறிவேப்பிலை , கொத்தமல்லி 
  • பெருங்காயம் 
  • உப்பு 
 சாமை அரிசி சமைப்பது எப்படி ?  


             சாமை அரிசியை கழுவி கல் அறிக்கவும்.  ஒரு பங்கு சாமைக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்கவும் . தண்ணீர்  நன்றாக கொதித்தவுடன் சாமை அரிசியை சேர்த்து வேகவைத்தால் சாமையரிசி சோறு தயார். இதை கொண்டு நாம் வழக்கமாக அரிசியில் செய்யும் அணைத்து வகையான கலவை சோறும் செய்யலாம். அல்லது சாம்பார் , ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.

சாமை அரிசி தேங்காய் சோறு:
  • எண்ணையை சுட வைத்து  கடுகு,  உளுந்த பருப்பு, கடலை பருப்பு,  கறிவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து தாளிக்கவும்.  
  •  கடுகு பொரிந்தவுடன்  பச்சை மிளகாய்  / வர மிளகாய், மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  •  வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  •  இத்துடன் சாமை அரிசி சோறு , உப்பு சேர்த்து கிளறவும். அணைத்தும் நன்றாக கலந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.    
  • தொட்டு  கொள்ள   அணைத்து வருவல்களும் பொருத்தமாக இருக்கும் .
 குறிப்பு :
அணைத்து சிறு தானியகளிலும் பொடி  கற்கள் இருக்கிறது. அறித்து பயன்படுத்துதல் நன்று. 
cooker பயன்படுத்த தேவையில்லை. உப்புமா செய்வது போல் பத்திரத்தில் சமைத்தால் போதும். விரைவாக வெந்துவிடும் . (கம்பு ,கேழ்வரகு தவிர)



                

                

Tuesday, September 3, 2013

கேழ்வரகு அடை



தேவை :
கேழ்வரகு -1 ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 2 கைபிடி  மெலிதாக வெட்டியது 
தேங்காய்- 1/2 மூடி (துருவல் அல்லது பல் பல்லாக வெட்டியது )
பச்சை மிளகாய் -  2 அல்லது 3 மெலிதாக வெட்டியது
முருங்கை கீரை - 2 அல்லது 3 கைபிடி
 எண்ணெய்
  • கேழ்வரகை 3 மணி நேரம் உறவைத்து அரைக்கவும்.
  •  அரைத்த மாவுடன் வெங்காயம், மிளகாய் , தேங்காய் , முருங்கை கீரை, உப்பு சேர்த்து நன்றாக் கலக்கவும் .
  • தோசை கல்லை காய வைத்து மெல்லிய அடைகளாய் தட்டவும்  . கொஞ்சமாக எண்ணெய் விட்டு , இரண்டுபுறமும் திருப்பி போட்டு வேகவைக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .  
குறிப்புகள் :
 கேழ்வரகு மாவு என்றால் மாவில் சிறிது வென்னீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் .
 முருங்கைகீரைக்கு பதில் காரட் , முட்டைகோஸ் ,பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து செய்யலாம் 


Saturday, June 29, 2013

கம்பு தோசை




தேவையான பொருள்கள் :
கம்பு - 1 ஆழாக்கு
உளுந்து -1/4 ஆழாக்கு
தனியா, சீரகம் - சிறிதளவு
வர மிளகாய் - 4 அல்லது 5
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் 1 கைபிடி


செய்முறை :
  1. 4 பங்கு கம்புக்கு 1 பங்கு உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின்  கம்பு , உளுந்து,  தனியா, சீரகம், வர மிளகாய், வெங்காயம், உப்பு   சேர்த்து  சற்று கொரகொரபாக அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம், அரைத்தவுடன் தோசை ஊற்றலாம். 
  3.  நல்ல எண்ணெய்  அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
மாவு கொரகொரபாக இருந்தால் தான் கம்பு தோசை ருசியாக   இருக்கும். இத்துடன் முருங்கை கீரை அல்லது  காரட் , முட்டைகோஸ்,  பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து அடை போலவும் செய்யலாம் .

Wednesday, May 29, 2013

இனிப்புடன் இனிய தொடக்கம்-திணை பொங்கல்




தேவையான பொருள்கள் :
திணை - 1 ஆழாக்கு 
பாசிபருப்பு - 1/2 ஆழாக்கு
வெல்லம் - 1 1/2 அல்லது 2 ஆழாக்கு
சுக்கு
ஏலக்காய்
நெய்


செய்முறை :
  1. பாசி பருப்பை வறுத்து கொள்ளவும். 
  2. திணையை கல் நீக்கி சுத்தம் செய்யவும்.
  3.  3  ஆழாக்கு தண்ணீரில் பாசி பருப்பை  வேக வைக்கவும்.
  4.  பாசி பருப்பு மலர்ந்து வெந்தவுடன் தினையை சேர்த்து  குழைய  வேக வைக்கவும்.  
  5. வெல்லதை பாகு காய்ச்சி சேர்க்கவும்.
  6.  திராட்சை முந்திரியை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய், சுக்கு பொடி செய்து சேர்க்கவும் . சுவையான , சத்தான  திணை பொங்கல் தயார் .

குறிப்பு :
பாசி பருப்பின் அளவை உங்கள் சுவைக்கு தக்க கொஞ்சம் குறைத்து கூட போடலாம். சிறிது உப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...