சத்து மாவு கஞ்சி என் மகள்களுக்கு பிடித்த பானம். ஒரு வயதில் இருந்து இதை அவர்களுக்கு கொடுத்து கொண்டுயிருக்கிறேன். இந்த சத்து மாவு எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய பதிவு இது.
இதில் உள்ள தானியங்களை உங்கள் சுவைக்கு ஏற்ற வாறு குறைத்து அல்லது கூட்டி கொள்ளலாம். அணைத்து தானியங்களையும் சுத்தம் செய்து, வெய்யிலில் காயவைத்து, அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக போட்டு சிறு தீயில் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்தால் சாது மாவு தயார். இதை கொண்டு கஞ்சி. கொழுக்கட்டை, இனிப்பு அடை , புட்டு என்று நமது தேவைக்கு தக்கவாறு பயன்படுத்தி கொள்ளலாம்.
சம்பா கோதுமை- 1/2 kg
கம்பு - 1 kg
கேழ்வரகு - 1 kg
வெள்ளை சோளம் - 1/4 kg
சிகப்பு அரிசி / கவுனி அரிசி/ புழுங்கல் அரிசி- 1/4kg
கருப்பு உளுந்து ( உடைத்தது )- 1/4 kg
பார்லி -1/4 kg
நில கடலை - 1/4 kg
பாசி பயிறு -1/4 kg
கொள்ளு - 1/4 kg
பொட்டு கடலை - 100gm
மக்கா சோளம் - 100 gm
முந்திரி - 200 gm
பாதாம் - 200 gm
சுக்கு -100gm
ஏலக்காய் -10gm
கல்உ ப்பு - 1 கை
கல் உப்பையும் வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி லேசாக தட்டி போடவும் (வறுக்க தேவையில்லை ). தண்ணீர் படாமல் பார்த்து கொண்டால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம். தானியங்களை முளை கட்டியும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment