Thursday, January 23, 2014

வரகு அரிசி தக்காளி சோறு


தேவை :
வரகு அரிசி சோறு - 1 கப்
தக்காளி -4 (medium size)
சின்ன வெங்காயம் - 2 கை 
பச்சை மிளகாய் -2 /3
பூண்டு - 4 பல் 
இஞ்சி - 1" துண்டு 
மஞ்சள் தூள் - 1/2 டி ஸ்பூன்
கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு - 1டி ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 3 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை , கொத்தமல்லி , உப்பு ருசிகேற்ப 



செய்முறை :
  1. இஞ்சி  , பூண்டை தோல் உறித்து தட்டி வைக்கவும் .
  2. வெங்காயம் ,   தக்காளியை நீளமாக, மெலிதாக வெட்டி வைக்கவும்.
  3.  பச்சை மிளகாய்யை  நீளமாக வெட்டி வைக்கவும்.
  4.  எண்ணெய்யை  சுட வைத்து கடுகு, சோம்பு , உளுந்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தட்டி வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் . லேசாக வதங்கிய பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பிறகு  தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள்  தூள், உப்பு  சேர்க்கவும் . காரம் அதிகம் தேவை பட்டால் சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம் . அனைத்தும்  ஒன்று சேர்த்து பச்சை வாசம் போன பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, வரகு அரிசி சோறு சேர்த்து கிளறவும். தேவை பட்டால் நல்ல எண்ணெய் சிறிது ஊற்றி கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுப்பது  என்றால்  நெய்  சேர்த்துகொள்ளலாம். கொத்தமல்லி மெலிதாக வெட்டி தூவினால் , சுவையான வரகு அரிசி தக்காளி சோறு தயார்.

வரகு அரசி சோறு
குறிப்பு :
  1. இந்த  அளவு  அரைகால் படி(approx. 200gm) அரிசிக்கு சரியாக இருக்கும்.
  2. சாமை அரிசி சமைப்பது போலவே வரகு அரிசியும் சமைக்க வேண்டும்.
  3. இஞ்சி  , பூண்டை மிக்ஸ்யில் அரைக்காமல், தட்டி போட்டால் வாசமாக இருக்கும் .
  4. இஞ்சி  , பூண்டு  சேர்க்காமல் கூட செய்யலாம் 



Thursday, January 9, 2014

கேழ்வரகு கொழுக்கட்டை








தேவை :
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் -1/2 மூடி துருவியது
ஏலக்காய் -2
நெய் - 1 தே . கரண்டி

செய்முறை :
  1. வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கெட்டி பாகு வைத்து கொள்ளவும் .
  2.  கேழ்வரகு மாவுடன் சூடான  வெல்லபாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, நெய்  சேர்த்து பிசையவும். மிகவும் சூடாக இருந்தால் முள் கரண்டி கொண்டு கிளறவும். 
  3. மாவு உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். பாகு போதவில்லை என்றால் சிறிது வென்னீர் சேர்த்து கொள்ளவும்.
  4.  கொழுக்கட்டை போல் பிடித்து அல்லது உருண்டையாக உருட்டி இட்லி தட்டில்  20 நிமிடம் வேகவைத்தால் கொழுக்கட்டை தயார்.
  5. இந்த மாவை சற்று மொத்தமாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து பிஸ்கட் cutter கொண்டு வெட்டி வேகவைத்து கொடுத்தல்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Snacks Boxல் கொடுத்து அனுப்ப சுவையான தீனி.


Related Posts Plugin for WordPress, Blogger...