Friday, November 21, 2014

திணை இட்லி

சற்று நீண்ட  இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி.

இந்த பதிவு திணை  இட்லி செய்வது பற்றி…


 படத்தில் திணை இட்லி+ சௌசௌ சட்னி

தேவையான பொருள்கள்;
திணை-  கால் படி(400 gm approx)
உளுந்து- 1 வீசம்படி (100 gm approx)
வெந்தயம்- 1 மேசைக்கரண்டீ
செய்முறை;

  •    திணை, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் கழுவி தனிதனியாக 2 அல்லது 3 மணி நேரம் தேவையான தண்ணீர் சேர்த்து ஊர வைக்கவும்.
  •   முதலில் வெந்தயத்தை அது ஊறிய  தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். வெந்தயம் அரைந்ததும், உளுந்து சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மைய அரைத்து எடுக்கவும்.
  •       பிறகு திணையை தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து சற்று கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்
  •   அரைத்த உளுந்து மாவு, தினை மாவுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைத்து இட்லி சுடவும். காலையில் அரைத்து மாலையில் சுடலாம், அல்லது மாலையில் அரைத்து மறு நாள் காலை சுடலாம்

குறிப்பு;
  • இதில் கவனிக்க வேண்டியது மாவின் பதம். சற்று கெட்டியாக இருந்தால் தான் இட்லி நன்றாக வரும், இல்லை என்றால் இட்லி அரைந்து விடும்.
  • சூடாக சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும், ஆறினால் கல் போல ஆகிவிடும் .
  • இதே போல், திணைக்கு பதில் சாமை அரிசி, வரகு அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு கொண்டும் இட்லி சுடலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...