Tuesday, January 13, 2015

பொங்கல் திருநாள் அன்று வைக்கப்படும் கூட்டு குழம்பு



பொங்கல் அன்று  சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொண்டு செய்யப்படும் இந்த குழம்பை, கொஞ்சம் கெட்டியாக வைக்கவேண்டும்.
படத்தில் சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் , கூட்டு குழம்பு


தேவை:
 பரங்கி காய் (பரங்கி பிஞ்சு இருந்தால் சுவையாக இருக்கும் , இல்லை என்றால் பழம் ), 1 கிற்று
மொச்சை(உறித்தது)- 2 கைபிடி
கத்திரி காய் - 2
அவரை - 15
சர்க்கரை வள்ளி கிழங்கு-1
 வாழை காய் - 1
உருளை- 1

சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
தக்காளி - 2
கொத்தமல்லி இலை  - 1  கைபிடி
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 Tbsp  அல்லது  காரத்துக்கு ஏற்ப
மல்லி தூள்- 1 அல்லது 11/2 Tbsp
மஞ்சள்  தூள்- 1 tsp
கல் உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்ல எண்ணெய் -  2 or 3 Tbsp

தாளிக்க :
கடுகு - 1/2 tsp
உளுந்து - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கைபிடி

 செய்முறை  :
  •  பரங்கி காய்,  சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழை காய்களை பட்டை சீவி சிறிய துண்டுகளாக வெட்டவும். மற்ற காய்களையும்  இதே போல் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • வெங்காயத்தை தோல் உறித்து இரண்டாக வெட்டவும்.
  • தக்காளியை நீட்ட வாகில் வெட்டவும்.
  •   புளியை கரைத்து வைக்கவும் .
  •  சட்டியில் எண்ணையை காயவைத்து , தாளிக்க கொடுத்த பொருள்களை சேர்க்கவும் .எல்லாம் பொரிந்து, லேசாக சிவந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக சிவக்க வேண்டும் .பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கிய பின் காய்களை சேர்த்து வதக்கவும் . காய்கள் நன்றாக வதங்க வேண்டும். எண்ணெய் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்றி கொள்ளவும். இப்போது புளி தண்ணீர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள்  தூள், கல் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . காய்கறிகள் வெந்து குழம்பு நன்றாக சுண்டிய பின் கொத்தமில்லி இலை போட்டு இறக்கவும்.


    குறிப்பு :
    • காய்கள் நன்றாக வதங்கினால் தான் குழம்பு சுவையாக இருக்கும் .
    • குழம்பு என்று சொன்னாலும், இது சாந்து போல் தான் இருக்க வேண்டும் , அதனால் தண்ணீர் சேர்க்கும் போது அளவாக சேர்க்கவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...