அறிமுகம்     சமையலில் புதுமையாக முயர்ச்சி செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரோக்கிய சமையலில் எப்பவும் ஆர்வம் அதிகம். ஆக கொஞ்சம் பாரம்பரியம், கொஞ்சம் புதுமை என்று எங்கள் வீட்டில் எப்போதும் மண் மணக்கும்! ஆம், மண் சட்டியில் சமையல்….. இப்படியெல்லாம் சொல்வதால் நான் பெரிய சமையல் நிபுனர் இல்லை. நான் செய்யும் சில சமையல்கள் குறிப்பாக சிறுதானிய சமையல் பற்றி உறவினர்களும், நன்பர்களும் அதிகம் கேட்பது உண்டு. இப்படி பதிவு செய்து வைத்தால், அவர்களுக்கு மட்டும் அல்ல ஆரோக்கிய சமையல் குறித்த தேடல் உள்ள அனைவருக்கும் பயன்படும் என்றே இங்கு எழுதுகிறேன்.
     என் வீட்டில் செய்யும் எல்லா சமையல் பற்றிய விளக்கங்களும் உண்டு. என் குழந்தைகள் வளர்ந்து சமையல் செய்ய தொடங்கும் போது அம்மாவின் அன்பு பரிசாக இந்த வலைபூ இருக்ககூடும்    

2 comments:

  1. உங்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். மேலும் உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...